பிரபல நடிகர் செவ்வாழை ராசு காலமானார்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

Photo of author

By Sakthi

பிரபல நடிகர் செவ்வாழை ராசு காலமானார்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
பிரபல நடிகர் செவ்வாழை ராசு அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவு திரையுலகத்தில் மட்டுமில்லாமல் இவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பருத்தி வீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலாமன நடிகராக மாறியவர் செவ்வாழை ராசு. பருத்தி வீரன் திரைப்படத்தில் பிணந்தின்னி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் செவ்வாழை ராசு. அது மட்டுமில்லாமல் மைனா, கந்தசாமி போன்ற பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் பாரதி ராஜா இயக்கிய கிழக்குச் சீமையிலே என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்குள் வந்தவர் நடிகர் செவ்வாழை ராசு. இவர் பல கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு உள்ள தனித்துவமான அங்கீகாரம் என்றால் அது அவருடைய குரல்வளம் தான். பல படங்களில் பல கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தாலும் பருத்தி வீரன் திரைப்படத்தில் இவர் நடித்த கதாப்பாத்திரம் இவரை மக்களிடையே பிரபலமடையச் செய்தது.
நடிகர் செவ்வாழை ராசு தேனி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து சினிமாத் துறைக்குள் வந்தவர். 70 வயதாகும் நடிகர் செவ்வாழை ராசு அவர்கள் சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.