மகன் செய்த செயலினால் பல கொடிகளை இழந்த பிரபல நடிகர்! இந்த விளம்பரத்தில் இருந்து அதிரடி நீக்கம்!

Photo of author

By Hasini

மகன் செய்த செயலினால் பல கொடிகளை இழந்த பிரபல நடிகர்! இந்த விளம்பரத்தில் இருந்து அதிரடி நீக்கம்!

சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் விசாரணை வளையத்தில் இருந்தார். தற்போது அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஆன்லைன் நிறுவனமான பைஜூஸ் என்ற நிறுவனம் தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் தற்போது அவருடைய மகன் கைது செய்யப்பட்டுள்ள வழக்கின் காரணமாக அந்நிறுவனத்த்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்தது.

அதனை தொடர்ந்து அந்த நிறுவனம் தற்போது தங்களுடைய விளம்பரப் படங்களில் இருந்து தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்து உள்ளது. பைஜூஸ் மட்டுமின்றி பல்வேறு நிறுவன விளம்பர படங்களிலும் ஷாருக்கான் நடித்து வந்தார் எனபது குறிப்பிடத் தக்கது. கடந்த 2014 ம் ஆண்டு முதலே பைஜூஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக ஷாருக்  இருந்து வந்த நிலையில், இதற்காக ஆண்டுதோறும் 4 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கியுள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்நிறுவனம் குறுகிய காலத்திலேயே அதீத வளர்ச்சி அடைந்ததற்கு ஷாருக்கானின் பங்களிப்பும் முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள புதிய சர்ச்சையால் அவரது விளம்பரங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எனினும் அவர் தொடர்ந்து அந்நிறுவனத்தின் விளம்பரங்களில் நடிப்பாரா? இல்லையா? என்பது இன்னும் சில காலங்கள் பொறுத்திருந்து தான் தெரியும். ஆனால் ஷாருக் நடித்த விளம்பரங்கள் நாடு முழுவதும் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.