பிரபல குணசித்திர நடிகர் மரணம்! அதிர்ச்சியில் திரைஉலகம்!
கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் மக்கள் மிகவும் பாதிக்கபடுவதும், உயிரை விடும் அளவுக்கு மிக தீவிரமாக பரவி வருகிறது.
அரசு பல திட்டங்களை செயல்படுத்தினாலும் நோயின் தாக்கம் என்னவோ அதிகரித்துதான் வந்தது.எனவே முழு ஊரடங்கும், தடுப்பூசி போடவும் அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.தடுப்பூசி போடுவதால் நோயின் தாக்கம் மிகவும் பாதிக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
பிரபல குணசித்திர நடிகரும், தயாரிப்பாளரும் ஆன ஜி.ஆர் என்ற ஜி.ராமச்சந்திரன் அவர்கள் களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுப்பட்டி ராஜா, மனுநீதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.
ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சவுண்ட் பார்ட்டி, காசு இருக்கணும், எங்கராசி நல்ல ராசி, காதலி காணவில்லை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்றி வந்த அவருக்கு வயது 73.
மீண்டும் பரிசோதனை செய்யும் போது தொற்று இல்லை என்று வந்தாலும், அவரின் உடல்நிலை மோசமடைந்து ஜி.ராமச்சந்திரன் இறந்தார்.அவரது மனைவி பூமணியும் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்த செய்தி கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.நடிகர்கள், இயக்குனர்கள் தொடர்ந்து அடுத்தடுத்து கோரோனாவிற்கு பலியாவது அனைவரும் அறிந்ததே.