பிரபல நகைச்சுவை நடிகருக்கு சப்தமே இல்லாமல் நடைபெற்ற டும் டும் டும்!

Photo of author

By Sakthi

ஆர் ஜே வாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய விக்னேஷ் காந்த் ஹிப் ஹாப் தமிழாவின் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பை ஆரம்பித்தார் தற்பொழுது 2 youtube சேனல்களை அவர் நடத்தி வருகிறார். அதோடு பிளாக் ஷீப் மற்றும் உனக்கென்னப்பா என்றும், அந்த சேனல்களுக்கு பெயரிட்டார்.

தற்சமயம் சன் டிவியில் பணிபுரிந்து வரும் இவர் வெள்ளித் திரையிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு ராஜாத்தி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், இவர்களுக்கு நேற்று எந்தவிதமான ஆரவாரமுமில்லாமல் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட பல நட்சத்திரங்கள் பங்கேற்று கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்கள். இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.