பிரபல சீரியல் நடிகை விவாகரத்து!! அதிரும் சின்னத்திரை நட்சத்திரங்கள்!!

0
139
Famous serial actress divorced!! Vibrant small screen stars!!
Famous serial actress divorced!! Vibrant small screen stars!!

sundari serial:சீரியலில் சுந்தரி நாடகம் என்று சொன்னால் யாருக்குத்தான் தெரியாது. அந்த அளவில் நம் குடும்ப பெண்மணிகளின் மனதில் இடம் பிடித்தவர் தான் “கேப்ரியல்லா செல்லஸ்”. கருப்பாக இருந்தால் ஹீரோயினாக நடிக்க சான்ஸ் கிடைக்காது என்கிற வார்த்தையை உடைத்தவர் இவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து பேமஸ் ஆனார்.

இதன் விளைவாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ஐரா என்கிற திரைப்படத்தில் நடித்த கேப்ரில்லா, பின்னர் சூப்பர் ஸ்டாரின் கபாலி, ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 போன்ற தமிழ் படங்களில் நடித்தார். இருந்தபோதிலும் அவர் சின்னத்திரையில் அவர் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். இவ்வாறு பிரபலமான நடிகை கேப்ரியல்லா தனது கணவரை விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக இணையத்தில் தகவல் ஒன்று பரவி வந்தது. நடிகை கேப்ரியல்லா, சுருளி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அப்போது அவர் குறும்படங்களில் நடிக்கும் போது கேமராமேனாக இருந்தவர் தான் சுருளி.இவர் முதலில் நண்பர்களாக பேச தொடங்கி பிறகு அது காதலாக மாறியுள்ளது. இதனை அவரது பெற்றோர்கள் ஏற்கவில்லை. இருந்தபோதிலும் பலவிதமான போராட்டங்கள் கடந்து இருவரும் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது மனைவிக்கு பக்க பலமாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் கேப்ரியல்லாவும், சுருளி மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் விரைவில் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாக பரவி வந்தது. ஆனால் இதற்கு ஒரு முடிவு கட்டுமாறு தன்னுடைய கணவர் சுருளி உடன் ஜோடியாக எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை கேப்ரியல்லா.

Previous articleபொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தீபாவளி பண்டிகைக்காக போக்குவரத்து துறையின் சிறப்பு அறிவிப்பு!!
Next articleபுயல் பதிப்பில் இதுவரை 126 பேர் பலி!! தொடர் மீட்ப்புபணி மேலும் அதிகரிக்கும்!!