2வது திருமணத்திற்கு தயாரான நாமிருவர் நமக்கிருவர் மகா! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Photo of author

By Sakthi

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரச்சிதா மகாலெட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி இவர் பிரபலமாகி பிரபலமானதோடு மட்டுமல்லாமல் இந்த தொடரில் தன்னுடைய ஜோடியாக நடித்த தினேஷ் உடன் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்தார்.

தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து அதன்மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். சரவணன் மீனாட்சி சீரியலில் முதல் பாகம் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து 2வது பாகத்திலும் மீனாட்சியாக இவர் நடித்திருந்தார் தொடர்ந்து சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து வந்தார்.

கடைசியாக அவர் நடித்து வந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2வது சீசனில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்தார். இது அவருடைய ரசிகர்களுக்கு இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. இவர் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார் அந்த சீரியலின் பெயர் சொல்ல மறந்த கதை.

நடிகை ரச்சிதாவிற்கும், சீரியல் நடிகர் தினேஷ் என்பவருக்கும், திருமணம் காதல் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினரிடையே சில பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக, இருவரும் தற்போது தனித்தனி வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் ரச்சிதா முதன்முறையாக கணவரை பிரிந்து வாழ்வது தொடர்பாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில், நடிகை ரச்சிதா மிக விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக சின்னத்திரை வட்டாரத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்சமயம் அவர் இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாகவும், மிக விரைவில் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள போவதாகவும், தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த இயக்குனர் யார் என்பது தொடர்பான தகவல் இதுவரையில் வெளியாகவில்லை