பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சலீம் கௌஸ் உடல்நலக்குறைவு காரணமாக, காலமானார் அவருக்கு வயது 70 என்று சொல்லப்படுகிறது.
சலீம் கௌஸ் வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் ஜிந்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமான முதல் படத்திலேயே தன்னுடைய அட்டகாசமான நடிப்பால் வித்தியாசமான சிரிப்பாற்றல் காரணமாக ரசிகர்களைக் கவர்ந்தார்.
மேலும் அப்போது தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வந்த கமலுடன் வெற்றிவிழா, நவரச நாயகன் கார்த்திக்குடன் சீமான், சத்யராஜுடன் மகுடம், பிரபுவுடன் தர்மசீலன், பிரசாந்துடன் திருடா திருடா, சரத்குமாருடன் சாணக்கியா,அஜித்துடன் ரெட், விஜய்யுடன் வேட்டைக்காரன், விஜயகாந்துடன் சின்ன கவுண்டர், என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதோடு நிறைய பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பு காரணமாக, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சலீம் கௌஸ்.
இந்த சூழ்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக, பாதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்தார். அவருடைய மறைவு ரசிகர்களையும். திரையுலகினரையும், அதிர்ச்சியிலாழ்த்தியிருக்கிறது.
சலீம் கௌஸ் மும்பையை சேர்ந்தவர் என்று சினிமா வட்டாரங்களில் முத்திரையைப் பதித்தார். ஆனால் இவர் திருநெல்வேலியிலுள்ள பாளையங்கோட்டையில் பிறந்தவர் என்றும், அக்மார்க் தமிழன் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர் திரைப்படங்களில் நடிக்க தனக்காக போய் வாய்ப்பு கேட்டதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த கதாபாத்திரத்தில் இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர்கள் கூப்பிட்டால் மட்டுமே நடிப்பாராம். இவர் நிதானமான நடிப்பும், வில்லத்தனமான நடிப்பு, மிகவும் தீர்க்கமான முகமும் வில்லனுக்கு உண்டான உடல் மொழியும் தன்னகத்தே வைத்திருக்கும் இவரை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை நடிகர் சலீம் கௌஸ் மறைவிற்கு திரையுலகினரும் , ரசிகர்களும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

