வேளாண் சட்டங்கள் டிராக்டர் பேரணி தொடர்பாக குறிப்பிட்டு பேசிய குடியரசுத் தலைவர்!

Photo of author

By Sakthi

இந்திய நாட்டின் 72வது குடியரசு விழாவை தொடர்ந்து நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார் .இதனையடுத்து நேற்றைய தினம் குடியரசு தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி இருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்கள் அனைவருக்கும் நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு என்னுடைய அன்பார்ந்த குடியரசு தின வாழ்த்துக்கள் குடியரசு நாள் என்ற தேசிய பெருநாளையும் நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாட இருக்கும் நேரத்தில், நம்முடைய தேசியக்கொடி மற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி நம்பிக்கையும் ,மரியாதையும், வெளிப்படுத்தி காட்டுகின்றோம் என்று குறிப்பிட்டிருக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

குடியரசு தினத்தை முன்னிட்டு வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விதமாக தலைநகர் டெல்லியில் மிகப் பிரம்மாண்டமான விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய உரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நம்முடைய நாட்டை உணவு தானியங்கள் ,மற்றும் பல் பொருட்கள் உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடையச் செய்வதற்காக நம்முடைய விவசாய சகோதர, சகோதரிகள், எல்லோரையும் நாட்டு மக்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மிக தீவிரமான இயற்கை சூழ்நிலையும் பல சவால்களையும் அதோடு சேர்த்து கொரோனா தொற்றையும் ,கடந்து நம்முடைய விவசாய பெருமக்கள் வேளாண்மை உற்பத்தி செய்வதில் எந்த ஒரு குறையும் வைக்காமல் உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். நன்றி உள்ள நம்முடைய நாடு நமக்கு உணவு கொடுக்கும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முழுமையாக தன்னை அர்ப்பணித்து இருக்கிறது என்று விவசாயிகளை பாராட்டிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், விவசாய சட்டங்கள் தொடர்பாக தன்னுடைய உரையில் குறிப்பிடுகிறார்.

முழு வீச்சில் முன்னேற்றம் பெற்று வரும் நம்முடைய பொருளாதார சீர்திருத்தங்கள் முடிவாக புதிய வேளாண்மை சட்டங்கள் உருவாக்கம் என்பது இருந்து வருகிறது. இதன் மூலமாக வெகுகாலமாக அனைவரும் எதிர்பார்த்திருந்த விவசாயம் மற்றும் தொழில் துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டு வருகின்றது .ஆரம்பத்தில் இந்த சீர்திருத்தங்கள் தொடர்பாக சில பயம் இருக்கலாம் ஆனால் விவசாயிகளுடைய நலனில் அரசு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயத்தில் எந்த ஒரு சந்தேகமும் தேவையில்லை. என்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக தெரிவித்திருக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.