ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!

Photo of author

By Pavithra

ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மேக்கினி நாடு பகுதியைச் சேர்ந்தவர் பூச்சம்மாள் மற்றும் இவரது மகன்,ஆகிய இவர்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மற்றும் பூபதி என்ற இருவர்கள் இவர்களின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்துள்ளனர்.இதுமட்டுமின்றி தாய் மகன் இருவரையும்,அவர்கள் வசிக்கும் வீட்டிற்கும்,அவர்களின் நிலத்திற்கும் வரக்கூடாது என்று தகராறு செய்து உள்ளனர்.

இதனால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளான இருவரும்,நேற்று திடீரென்று நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளனர்.இவர்களின் இந்த செயலை கண்டு அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து,நல்லிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.