விவசாயிகள் செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது – முதல் மந்திரி!

0
151
Farmers do is politically motivated - First Minister!
Farmers do is politically motivated - First Minister!

விவசாயிகள் செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது – முதல் மந்திரி!

டெல்லி எல்லைகளில் மத்திய அரசின் புதிய 3 வேளாண் கொள்கைகளை திரும்ப பெறக் கூறி பஞ்சாப், ஹரியானா, மற்றும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுவும் கடந்த நவம்பர் மாதம் முதல் 7 மாதங்களாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். அரசுக்கும், விவசாயிகளுக்கும் நடைபெற்ற அனைத்து கட்ட பேச்சுவார்த்தைகளிலும், எவ்வித உடன்பாடும் எட்டவில்லை.

வேளாண் சட்டமே வேண்டாம் என்று கூறும் போது எப்படி கூறும் நிபந்தனைகளுக்கு உட்ப முடியும். மத்திய அரசு இதை கவனத்தில் கொண்டால் பரவாயில்லை என்பது அனைவரின் வேண்டுகோளாக வைத்துள்ளனர்.

இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாய அமைப்பின் தலைவர் குர்ணம் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட வேண்டும் என கூறியுள்ளார்.

இது விவசாயிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் போராட்டம் திசை திரும்பி செல்லும் சூழலும் காணப்படுகிறது. இதனால் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் தொடங்கிய விவசாயிகள் அரசியலில் நுழையக் கூடிய சாத்தியமும் ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் வெளிப்படையாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது பஞ்சாப் மக்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று குர்ணம் சிங் சாதுனி கூறுகிறார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு பின் அரசியல் உள்ளது என நாங்களும் தொடர்ந்து கூறி வருகிறோம். இதனை தொடர்ந்து நடந்துவரும் போராட்டமானது அரசியலில் அவர்களுக்கு ஈர்ப்புகளை உருவாக்கி வருகிறது. மேலும் அவர் விவசாயிகளைப் பற்றி கவனத்தில் கொள்ளவில்லை என்றும் கட்டார் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

Previous articleபாஜக அமைச்சருக்கு முதல்வர் தொலைப்பேசி அழைப்பு! இந்த காரணத்திற்காக தானா?
Next articleகின்னஸில் இடம் பிடித்த பசுவை காண கூடும் கூட்டம்! காரணம் இதுதான்!