விவசாயிகளே 20ஆம் தேதி வரை தான் டைம்; இத பண்ணலன்னா பணம் கிரெடிட் ஆகாது!

0
14

இந்திய அரசு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தகுதி வாய்ந்த விவசாயிகளையும் தேர்ந்தெடுத்து ஆண்டுக்கு 6000 ரூபாய் மானியம் கொடுக்கப்படுகின்றது.

இதை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 வீதம் 3 தவணையாக வழங்கப்படும். இந்திய அரசாங்கம் அண்மையில் வெளியிட்டு அறிவிப்பில் பதிவு செயல்முறையை முடித்த விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற முடியும் எனவும் அறிவித்தது. மேலும் eKYC கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். 

இருபது தவணை பெற விவசாயிகள் பார்மர் ரிஜிஸ்டர் யூபி மொபைல் செயலி அதிகாரபூர்வ, பிஎம் கிசான் வலைதளம் அல்லது ஏதேனும் பொது சேவை வசதியை முதலில் பார்வையிட வேண்டும். அதன் மூலம் பதிவு நடைமுறையை முடிக்க வேண்டும் கூடுதலாக அவர்கள் KYC பூர்த்தி செய்திருப்பது அவசியம். அதனுடன் ஆதார் அட்டை, நில சரிபார்ப்பு மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட செயலில் உள்ள வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

பி எம் கிசான் யோஜனா என்ற அதிகாரவபூர்வ வலைதளத்தை பார்வையிட்ட பிறகு, பார்மர் பகுதிக்குச் சென்று தங்களது விருப்பத்தை தேர்வு செய்து ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும்.

அவை அனைத்தும் சரி பார்க்கப்பட்ட பிறகு மொபைல் எண்ணிற்கு ஓடிபி வழங்கப்படும் அதனை அதில் பயன்படுத்தினால் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதவெக விஜய்யுடன் பாமக கூட்டணி உறுதி?? ராமதாஸ் சொன்ன தகவல்!!
Next articleமூன்றாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா; மாணவர்களை சந்திக்க தயாரான தவெக தலைவர் விஜய்!