இன்றைய சூழ்நிலையில், அவரவர்கள் வங்கிக்குச் சென்று பணம் பரிமாற்றத்தை மேற்கொள்வது என்பதெல்லாம் மிகமிக குறைவாகி வருகிறது சிறுசிறு தொகைக்கெல்லாம் யாரும் வங்கிகளுக்கு நேராக செல்வதில்லை. இணையவழியில் கூகுள்பே, போன்பே, உள்ளிட்ட பல்வேறு வகையான செயலிகள் மூலம், நெட்பேங்கிங் மூலமாகவும் பண பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.
அந்த விதத்தில் இந்த நவீன காலத்திற்கு ஏற்றவாறு வங்கிகளில் டிஜிட்டல் சேவை வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் யுபிஐ சேவைகளில் ஒன்றாக கூகுள் பே இருக்கிறது. இதில் தற்சமயம் மிக விரைவாக பணம் செலுத்தும் புதிய அம்சம் ஒன்று அறிமுகமாகியிருக்கிறது.
இதனடிப்படையில், பின் லேப்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒன்றிணைந்து கூகுள் நிறுவனம் tap to pay என்ற அம்சத்தை இந்த செயலியில் அறிமுகம் செய்திருக்கிறது. இதனடிப்படையில், கடையில் பொருட்கள் வாங்குபவர்கள் ஸ்கேன் செய்வதற்கு பதிலாக அவர்களுடைய போனை tap செய்தால் போதும் கூகுள் பேவிற்கு தானாகவே சென்று யுபிஐ பின் கேட்கப்படும். அதன்பிறகு யுபிஐயின் பின் நம்பரை டைப் செய்தால் பணம் மிக விரைவாக சென்றுவிடும். இந்த அம்சத்தின் வலமாக ஒவ்வொரு முறையும் நாம் கூகுள் பேயில் கேமராவை ஓப்பன் செய்து ஸ்கேன் செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்படுகிறது.