அதுக்கு நாங்க காரணமில்ல! விளக்கம் தந்த மத்திய அரசு!

0
107

தலைநகர் புதுடெல்லியில் எதிர்வரும் 20ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் செல்லும் வாகன பேரணியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம், உள்ளிட்ட மாநிலங்களில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. இதற்கு அதிருப்தி தெரிவித்து தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்கள். அதோடு மாநிலங்களில் இருக்கின்ற அரசியல் கட்சி தலைவர்களும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் மத்திய அரசு வட்டாரத்தில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் தங்களுடைய மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது குறித்து மாநில முதலமைச்சர்கள் தரப்பிலிருந்து எழுதப்பட்ட கடிதங்கள் எங்களுக்கு கிடைத்து இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த விவகாரம் தவறுதலாக மாநில பெருமையுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதோடு இதனை மத்திய அரசு மாநில மக்களுக்கு செய்த அவமரியாதையாக உருவகப் படுத்தப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறது மத்திய அரசு.

ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பு செய்யப்படுகிறது. மாநில முதலமைச்சர்கள் இதுபோல கடிதம் எழுதுவது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், இடையில் பிரச்சினைகள் இருப்பதை போல உருவகம் ஏற்படும். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று தெரிவித்திருக்கிறது.

இது இந்த நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை நீண்டகாலத்திற்கு பாதிக்கும் இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர்களுக்கு எந்த நேர்மறையான வருத்தங்களும் இல்லாவிட்டாலும் தவறான தகவலை பரப்பும் இந்த முறையை ஒவ்வொரு வருடமும் செய்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

அலங்கார ஊர்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்யவில்லை ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களில் இருந்து வரும் மாநில அலங்கார ஊர்திகளை கலாச்சாரம், இசைக்கலை, சிலை உள்ளிட்ட துறைகளின் வல்லுனர்கள் குழு ஆய்வு செய்து இது தொடர்பாக முடிவு மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

வல்லுனர்கள் குழு இந்த ஊர்தியின் அடிப்படையான கருத்தாக்கம், வடிவமைப்பு, காட்சியின் தாக்கம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து முடிவு செய்யும் 2022 குடியரசு தின விழாவிற்கு 56 பரிந்துரைகள் வந்தனர். இதில் 21 பரிந்துரைகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. கேரளா, தமிழகம் மற்றும் மேற்கு வங்கம், உள்ளிட்ட மாநிலங்களில் படைப்புகள் வல்லுநர் குழுவால் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleகுடியரசு தின விழாவில் தமிழக ஊர்தி நிராகரிப்பு! பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Next articleமோடியை தவறாக சித்தரித்த விவகாரம்! பிரபல தொலைகாட்சிக்கு மத்திய அரசிடம் இருந்து பறந்த நோட்டீஸ்!