நமது முன்னோர்கள் தான் காகத்தின் ரூபத்தில் இந்த பூலோகத்தில் வலம் வருகின்றனர், என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே பரவி வருகிறது. ஆனால் காகத்தைப் பற்றி நாம் அறியாத இன்னும் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. இந்த காகத்திற்கு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருக்கிறது.
ஒரு குடும்பத்திற்கு வரவிருக்கும் நல்லது மற்றும் கெட்டதை முன்கூட்டியே அறிந்து, அதனை வலியுறுத்தக்கூடிய சக்தியும் இந்த காகத்திற்கு உண்டு.
மற்ற பறவைகளிடம் இல்லாத ஒரு குணமும் இந்த காகத்திற்கு உண்டு. பொதுவாக மற்ற பறவைகள் எந்தவித தீட்டுகளையும் பார்க்காது, ஆனால் காகம் ஆனது தீட்டை உணர்ந்து நடக்கும்.
காகம் கூட்டங்களுள் ஏதேனும் ஒரு காகம் இறந்து விட்டால், அந்த காகத்தை சுற்றி காக கூட்டங்கள் நிறைந்து இருக்கும். மேலும் தனது துக்கத்தையும் தெரிவித்து ஏதேனும் ஒரு நீர் நிலையங்களுக்கு சென்று குளிக்கவும் செய்யும். இவ்வாறு மனிதனுக்கு இணையாக தீட்டை கடைபிடிக்கும் உயிரினங்களுள் காகமும் ஒன்று.
இவ்வாறு பல சிறப்புகளைப் பெற்ற இந்த காகத்திற்கு தினமும் நமது கையினால் உலர் திராட்சைகளை உணவாக வைக்க வேண்டும். தினமும் காகத்திற்கு உலர் திராட்சையை உணவாக வைத்து வந்தால், அதன் புண்ணியம் நமது ஏழேழு ஜென்மங்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதாவது நீங்கள் பிறந்ததிலிருந்து உங்களது வாழ்க்கை முடியும் வரை, எந்த வித தீர்க்க முடியாத பிரச்சனைகளும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. நமது வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படக் கூடாது என நினைப்பவர்கள், இந்த ஒரு பொருளை காகத்திற்கு தினமும் உணவாக வைத்து வந்தோம் என்றால், அதற்கான பலன் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
காகம் நமது வீட்டிற்கு அருகில் வந்து கத்தினால் அதற்கு உணவு வைப்போம். ஆனால் அந்த காகம் உணவினை எடுக்காமல், கரைந்து கொண்டே இருக்கிறது என்றால், நமது வீட்டில் சுப செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு வரப்போவதை உணர்த்துகிறது என்று அர்த்தம்.
அதேபோன்று நாம் சென்று கொண்டிருக்கும் பொழுது, திடீரென காகம் அதன் இறக்கைகளினால் அல்லது கால்களினால் நமது தலையில் தட்டி சென்றாலோ அல்லது அதன் எச்சத்தை நம் மீது போட்டாலோ நமக்கு உடல் ரீதியான ஏதேனும் ஒரு பிரச்சனை வரப்போவதை குறிக்கிறது.
நமக்கு வரக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே வலியுறுத்தக் கூடிய தன்மை இந்த காகத்திற்கு இருப்பதினால் தான், இதுபோன்று செயல்களை நம்மிடம் வெளிப்படுத்துகிறது. அதேபோன்று காகத்திற்கு நாம் உணவு வைக்கும் பொழுது, ஒரு காகம் உணவு உண்ணாமல் மற்ற காகங்களையும் அழைத்து, அனைத்து காகங்களும் சேர்ந்து உணவை அருந்தினால், நமது பித்ருக்களின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக இருப்பதாக அர்த்தம்.
எனவே காகத்திற்கு தினமும் உணவு வைப்பதனால் நமது பித்ருக்களின் ஆசீர்வாதமும், சனிபகவானின் ஆசீர்வாதமும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காகத்திற்கு பழைய, கெட்டுப்போன, மற்றும் எச்சில் சாதத்தை ஒருபோதும் வைக்க கூடாது.
மேலும் தினமும் காகத்திற்கு வைக்கக்கூடிய உணவுடன் உலர் திராட்சையையும் சேர்த்து வைத்து பாருங்கள், உங்களது வாழ்க்கையில் நடக்கக்கூடிய மாற்றங்களை கண்கூடாக உணர முடியும்.