பயப்படாமல் தாராளமா இனி மூன்று குழந்தை பெற்றுகொள்ளலாம்! அரசு அறிவித்த அதிரடி!
சீனாவில் தற்போது தம்பதிகள் அனைவரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, பல சலுகைகளுடன் கூடிய சட்டம் அந்த நாட்டின், நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறி உள்ளது. எப்போதுமே உலக அளவில் மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் உள்ளது குரிப்பிடப்தக்கது. அந்த நாட்டில் மட்டும் 144 கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்பதும் நாம் பல ஆண்டுகளாக அறிந்ததே.
இந்நிலையில் சீனாவில் மக்கள்தொகை கட்டுப்படுத்துவதற்காக ஒரு தம்பதி ஒரு குழந்தைதான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை அங்கு அமல்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக இது நடைமுறையிலும் இருந்தது. மேலும் இந்த கொள்கையை கடைபிடிக்கிறார்களா என்றும் மக்களை கவனித்து வந்தனர். அந்தக் கொள்கையின் காரணமாக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் படிபடியாக சரியத் தொடங்கியது.
இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு தம்பதிகள் அனைவரும் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என ஒரு கொள்கை மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அதன் காரணமாக அங்கு மக்கள் தொகையில் வளர்ச்சி ஏதும் ஏற்படவும் இல்லை, அதிகரிக்கவில்லை. மேலும் ஒருபுறம் விலைவாசி உயர்வும், குழந்தைகளை பெற்று வளர்ப்பதற்கு ஆகிய செலவுகளாலும் பல தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதையே தள்ளிப் போடுகிற அவலமும் ஏற்பட்டது.
அது தற்போதும் பல குடும்பங்களில் தொடர்கிறது. தற்போது தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிறப்பு விகிதம் மிகவும் சரிந்து உள்ளதை சுட்டியும் காட்டியது. இந்த நிலையில் சீனாவில் தம்பதிகள் அனைவரும் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு, ஜின்பிங் அரசு இந்த அறிவிப்பை கடந்த மே மாதம் அறிவித்தது.
மேலும் இது மிகப்பெரிய கொள்கை மாற்றமாக சீனாவில் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சீனாவின் நாடாளுமன்றத்தில் நேற்று ஒரு சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றமும் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதையும், குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கான சுமையை குறைப்பதையும் நோக்கமாக கொண்ட பல தீர்மானங்கள் உடன் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரம்புக்கு அப்பாற்பட்டு குழந்தைகளை எந்த ஒரு தம்பதிகள் சீனாவில் பெற்றுக் கொண்டாலும், அதற்கு அவர்களுக்கு சமூக பராமரிப்பு கட்டணம் கூட விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக தம்பதியருக்கு தனி விடுமுறையும் அளிப்பதற்கு ஏற்ப உள்ளூர் அரசு அமைப்புகளின் மூலம் ஊக்குவிக்கப்படும்.
மேலும் பெண்களின் வேலை வாய்ப்பு உரிமைகள் அதிகரிக்கப்படும். தொடர்ந்து குழந்தைகளின் பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும், என்றும் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு வகை செய்து ஜின்பிங் அரசு அளித்துள்ள சலுகைகளால் அங்கு பிறப்பு விகிதம் இனிவரும் காலத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.