வேகமெடுக்கும் கொரோனா பரவல்; விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடு அமல்!!

0
16

கொரோனா பரவல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிகரித்து காணப்பட்ட நிலையில் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டது. முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

அதன் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் செலுத்தப்பட்டதால் கொரோனா பரவால் படிப்படியாக குறைந்தது. மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிய வகை கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறை சார்பாக அதிகம் மக்கள் கூடும் இடங்களில் உள்ள கழிவறை மற்றும் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில் விமான நிலையம் வரும் பயணிகளிடம் கண்காணிப்பு பரிசோதனை நடத்தப்படுகின்றது. 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு பரிசோதனை செய்வதற்கு சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. காய்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருக்கும் பயணிகளுக்கு ஸ்கேனர் கண்காணிப்பு கருவி மூலம் பரிசோதனை செய்யப்படும். கொரோனா தொற்று பரவல் இருக்கும் என கண்டறியப்பட்டால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மதுரை விமான நிலையத்தில் தற்போது பரிசோதனை தொடங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous articleபுதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வெளியான குட் நியூஸ்; வங்கி கணக்கில் நேரடியாக பணம் டெபாசிட்!!
Next articleஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்; தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு என்ன தெரியுமா!!