நாட்டில் சற்றே குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

0
168

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15,851 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 16,561 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட சூழ்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அது சற்றே குறைந்திருக்கிறது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15,851 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,42,53,740 என ஆனது, கடந்த 24 மணி நேரத்தில் 20,018 பேர் நலமடைந்த அதன் காரணமாக இந்த நோய் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,35,93,112 என்ற அளவிலிருக்கிறது.தற்சமயம் 1,19,264 பேரு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நோய் தொற்று காரணமாக, 68 பேர் பலியானதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,26,996 என அதிகரித்தது. நாட்டில் இதுவரையில் 207.71கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Previous articleபன்றி தோல் மூலம் கண் பார்வை! இந்தியா மற்றும் ஈரான் ஆய்வில் வெற்றி!
Next articleவங்கிகள் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு!