மூவி ரிவியூவ்-க்கு தடை இல்லை!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

Photo of author

By Sakthi

movie review :திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கடந்த மாதம் நவம்பர்-14 ஆம் தேதி வெளியான படம் தான் “கங்குவா”. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து இரு வேறு காலகட்டத்தில் கதை நடப்பது போன்று திரைக்கதை இருந்தது. ஆனால் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெறாமல் போய்விட்டது.

கங்குவா திரைப்படம் திரையிடப்பட்ட இரண்டு, மூன்று நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இந்த படம் சரிவர பொதுமக்கள் பார்க்க வராதற்கு காரணம் திரைவிமர்சனம் தான் என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. இந்த படத்தை போலவே இந்தியன்-2 திரைப்படத்திற்கு விமர்சனங்கள் பாதிப்பை ஏற்படுத்தியது என கூறினார்கள்.

எனவே திரை விமர்சனங்களை படம் திரையிடப்பட்டு 3 நாட்கள் வரை யூடியூப் சேனல், பேஸ்புக், இன்ஸ்டா சமூக வலைதளத்தில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என  திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்து இருந்தார்கள். அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உயர்நீதிமன்றம் நடந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு,பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க இயலாது. எனவே திரைப்படம் குறித்து அவதூறு பரப்பியவர்கள்  குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என உத்தரவு பிறப்பித்தார்.