நல்ல காரியத்திற்கு செல்லும் பொழுது ஏற்படக்கூடிய நல்ல சகுனங்கள் எவை எவை என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Janani

நல்ல காரியத்திற்கு செல்லும் பொழுது ஏற்படக்கூடிய நல்ல சகுனங்கள் எவை எவை என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

Janani

Find out what are the good omens that can happen when going for a good cause!!

நாம் வெளியில் செல்லும் பொழுது சில சகுனங்கள் நல்லவையாகவும், சில சகுனங்கள் கெட்டவையாகவும் இருக்கும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. அதாவது நாம் வெளியில் ஒரு முக்கியமான காரியமாக செல்கிறோம் என்றால் சில சகுனங்கள் நல்லதாக இருந்தால் நாம் செல்லக்கூடிய காரியம் வெற்றி அடையும் எனவும், அதே சமயம் சில சகுனங்கள் கெட்ட சகுனங்களாகவும் இருக்கும் அந்த சகுனங்கள் ஏற்பட்டால் நாம் எந்த காரியத்திற்காக செல்கிறோமோ அந்த காரியம் நல்லபடியாக நடந்து முடியாது எனவும் கூறப்படுகிறது.
எனவே நல்ல சகுனங்கள் எவை, கெட்ட சகுனங்கள் எவை என்பதை தெரிந்து கொண்டு நாம் ஏதேனும் ஒரு முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது இந்த சகுனங்கள் ஏற்பட்டால் நாம் வெளியில் செல்லலாமா? அல்லது வேண்டாமா? என முடிவு செய்து கொள்ளலாம். சகுனங்கள் குறித்த விளக்கத்தினை தற்போது காண்போம்.
நிறை குடம்:
நாம் வெளியில் செல்லும் பொழுது ஒருவர் நிறைக்குட தண்ணீருடன் நமக்கு எதிரே வருகிறார்கள் என்றால் நாம் அவரை பார்த்துவிட்டு செல்கின்ற காரியம் அனைத்தும் பரிபூரண வெற்றியடையும். இந்த நிறைகுடம் ஆனது ஐஸ்வர்யம் மற்றும் செல்வத்தைக் குறிக்கிறது.
முக ராசி:
ஒருவர் முகராசி மற்றும் முக லட்சணம் உடையவர்கள் என ஒரு சிலருக்கு ஒரு சிலரின் மேல் அந்த நம்பிக்கை வரும் அத்தகையவர் நம் எதிரே வந்தால் நினைத்த காரியம் வெற்றி அடையும். சுமங்கலிகள் நம் எதிரே வந்தாலும் நல்லது என்று சாஸ்திரங்கள் கூறியுள்ளது. அதுமட்டுமன்றி சுமங்கலிகளோ அல்லது முக ராசியில் உள்ளவர்களோ யாராக இருந்தாலும் ஒரு நல்ல மனதினை கொண்டவர்களாக இருக்க வேண்டும். அத்தகைய தன்மை உடையவர் நாம் வெளியில் செல்லும் பொழுது நம் கண்ணுக்கு எதிரே வந்தால் செல்லக்கூடிய காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும்.
இடம் இருந்து வலம்:
நாம் வெளியில் செல்லும் பொழுது காகம் மற்றும் கருங்குருவி என்று சொல்லக்கூடிய பறவைகள் நமக்கு இடது புறத்திலிருந்து வலது புறமாக பரந்து சென்றால் அது நல்ல சகுனமாக விளங்கும்.
தண்ணீர் குடிப்பது:
நாம் ஒரு முக்கியமான காரியத்திற்காக வெளியில் செல்கிறோம் என்றால் நமது வீட்டில் உள்ள அம்மா, தங்கை அல்லது மனைவி போன்றோரிடம் ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கி பருகி விட்டு வெளியில் செல்ல வேண்டும். அவ்வாறு தண்ணீர் குடித்து விட்டு வெளியில் செல்வது நமது உடல் நலத்திற்கும் நல்லது அதே சமயம் சாஸ்திரங்கள் படியும் நல்லதாக அமையும்.
நாய்:
நாம் வெளியில் செல்லும் பொழுது நமது வீட்டில் வளர்க்கக்கூடிய அதாவது செல்லப் பிராணியாக வளர்க்கக்கூடிய நாயினை தவிர்த்து வெளியில் உள்ள நாய்களுள் ஏதேனும் ஒரு நாய் அதன் வாலினை ஆட்டிக்கொண்டு நம்மிடம் வருகிறது என்றால் அதுவும் நல்ல சகுனமாக கருதப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள்:
கர்ப்பிணி பெண்கள் நமக்கு எதிரே வருவதும் நமக்கு நல்ல சகுனமாக அமையும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
ஏதேனும் ஒரு உயிரினம் மரத்தில் ஏறுவது போல கண்டால்:
நாம் வெளியில் செல்லும் பொழுது ஏதேனும் ஒரு உயிரினம் அணிலோ குரங்கோ இது போன்ற ஏதேனும் ஒரு உயிரினம் மரத்தின் மேல் ஏறுகிறது என்றால் அதுவும் நல்ல சகுனமாக விளங்கும்.
அதேபோன்று நாம் ஒரு முக்கியமான காரியத்திற்கு வெளியில் செல்கிறோம் என்றால் நமது குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தினை மனதார வேண்டிக் கொண்டு பிறகு வெளியில் செல்ல வேண்டும். நாம் தினமும் விளக்கேற்றி பூஜை செய்யக்கூடிய காமாட்சி அம்மன் விளக்கில் உள்ள எண்ணெயை தொட்டு நமது நெற்றியில் இட்டுக்கொண்டு வெளியில் சென்றாலும் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும் எனவும் சாஸ்திரம் கூறுகிறது.