இரவு நேர மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து:! 13 பேர் உயிரிழந்த சம்பவம்!! 40-ற்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

0
300

இரவு நேர மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து:! 13 பேர் உயிரிழந்த சம்பவம்!! 40-ற்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

தாய்லாந்தில் உள்ள இரவு நேர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 13 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாய்லாந்தின் கிழக்கு மாகாணமான,சோன்பூர்
சத்தாஹிப் மாவட்டத்திலுள்ள மௌண்டன் பி பப் என்ற நைட் கிளப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால்,கிளப்பினுல் இருந்த 13 பேர் உடல் கருகி பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.மேலும் 40-ற்க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் அயல் நாட்டைச் சார்ந்தவர்கள் யாரும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த தீ விபத்திற்கான காரணங்கள் சரியாக தெரியவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இந்த தீ விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Previous articleமாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய இனிப்பான செய்தி!
Next articleசவுக்கு சங்கருக்கு சாட்டையடி கொடுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here