பெயிண்டை சுத்தம் செய்ததால் ஏற்பட்ட தீ! அதிர்ச்சி சம்பவம்!

Photo of author

By Hasini

பெயிண்டை சுத்தம் செய்ததால் ஏற்பட்ட தீ! அதிர்ச்சி சம்பவம்!

Hasini

Fire caused by cleaning paint! Shocking incident!

பெயிண்டை சுத்தம் செய்ததால் ஏற்பட்ட தீ! அதிர்ச்சி சம்பவம்!

இந்தியாவில் வட மாநிலத்தை சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர்.நிறைய தொழிற்சாலைகளில் அவர்களை காண முடிகிறது.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் கார் கதவுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் கம்பெனிகள் நிறைய உள்ளது.அதில் ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த பிப்லாப் பத்ரா (வயது 20) என்ற நபர் குன்றதூரை அடுத்த சிறுகளத்தூரில் உள்ள அந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

அந்த இடத்தில் பிப்லாப் பத்ரா வேலை செய்யும் போது தவறுதலாக பெயிண்டை கீழே கொட்டிவிட்டார்.கொட்டிய பெயிண்டின் மீது தின்னரை ஊற்றி துடைத்தும் விட்டார்.

இந்நிலையில் பெயிண்டை முழுமையாக எடுக்க இரும்பு ஷீட் கொண்டு சுரண்டி எடுத்தார்.இரும்பு தகடால் தரையை சுரண்டிய பொழுது ஏற்பட்ட தீப்பொறி தின்னரில் பட்டதனால் அந்த நபர் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது.

இதன் காரணமாக பத்ரா அலறி துடித்தார்.உடனே அக்கம் பக்கத்தினர் அவர் உடலில் தீயை அணைத்தனர்.அதன்பின் படுகாயம் அடைந்த அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து குன்றத்தூர் போலீசார் வல்லு பதிந்து விசாரித்து வருகின்றனர்.