பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட கப்பலில் தீ விபத்து! துறைமுகத்தில் பரபரப்பு!

0
133
Fire on ship parked for maintenance! Excitement at the port!
Fire on ship parked for maintenance! Excitement at the port!

பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட கப்பலில் தீ விபத்து! துறைமுகத்தில் பரபரப்பு!

ராசல் கைமாவில் அல்-ஜசீரா துறைமுகம் வர்த்தக ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கப்பல்கள் அதிக அளவில் வந்து செல்லும் ஒரு முக்கியமான இடமாக இந்த துறைமுகம் இருந்து வருகிறது. இந்த துறைமுகத்தில் பராமரிப்பு பணிகளுக்காக கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திடீரென்று கப்பலில் தீ பிடித்து விட்டது.

சற்று நேரத்தில் மளமளவென தீ பரவி கப்பல் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இது பற்றி தகவல் அறிந்த 4 தீயணைப்பு நிலையங்களில், இருந்து வாகனங்களில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் உடனடியாக தீயை அணைக்கப் ஆரம்பித்தனர். அவர்கள் நீண்ட நேரமாக தீயை அணைக்க போராடினர்.

அதன் பிறகு கிரேன் மூலம் நாலாபுறமும் தண்ணீரை பீச்சி அடித்து 1:20 மணி வரை போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன் பிறகு விடிய, விடிய நெருப்பை அணைக்கும் பணி நடைபெற்றது. முழுமையாக நேற்று அதிகாலை 4 மணிக்கு தீயை அணைத்தனர். 4 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ராசல் கைமாவின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleநாளை திறக்கப்படும் முதுமலை காப்பகம்! இவர்கள் வருகையை தவிர்க்க வேண்டும்!
Next article4 ஆண்டுகளில் 8 ஆண்களை மணந்த பெண்! பரிசோதனையில் HIV!