முதல் உயிரிழப்பு கேரளாவில்! காரணம் இதுவா? மக்கள் பீதி!
கொரோனாவின் இரண்டாம் அலை மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் துணைஇன்றி வெற்றி அடைய முடியாது.
தற்போது புதிதாக கரும் பூஞ்சை பாதிப்பு பரவி வருகிறது.இது நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளவர்களையும், உடலில் சர்க்கரை பாதிப்பு அதிகம் உள்ளோரையும் பாதிக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் இதை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது.
அதை தொடர்ந்து வடமாநிலங்களில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது.இந்த சூழ்நிலையில் கேரளாவில் கரும் பூஞ்சை தொற்று காரணமாக ஒரு இளம்பெண் உயிரிழந்தார்.
திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 32 வயதுடைய பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.கேரளாவில் இதுவரை 15 பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதனை தொடர்ந்து பூஞ்சை நோய் தாக்கி ஒருவருக்கு கண் நோய் ஏற்பட்டு கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
62 வயதான அப்துல் காதர் என்பவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து கண் அகற்றப்பட்டுள்ளது.இதற்கு தேவையான மருந்துகளை தயாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.