விவசாயிகளுக்கு எதிராக முதல் மந்திரியின் கருத்து! பலரும் கண்டனம்!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாற்றங்களை செய்வதாக கூறுகிறது. ஆனால் விவசாயிகளோ முழுமையாக அந்த சட்டங்களே வேண்டாம் என்று கூறுகின்றனர்.
இதன் காரணமாக இரண்டு பேருக்கும் பேச்சு வார்த்தைகள் ஒத்து போகவில்லை. இன்னும் பிரச்சனை சரியாகவில்லை. அதன் காரணமாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் முதலே அவர்கள் கையில் எடுத்த போராட்டம் இன்றளவும் தொடர்ந்து சளைக்காமல் அவர்களும் செய்து வருகிறார்கள்.
மத்திய அரசும் அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. பிரதமர் மோடி அவர்களையே இந்த பெருமைகள் எல்லாம் சேரும். இந்நிலையில் அரியானா மாநில பாஜக விவசாய பிரிவு சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்-மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான மனோகர் லால் கட்டார் பங்கேற்றார். அவர் அந்த விழாவில் வடக்கு மற்றும் மேற்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும், எழுநூறு முதல் ஆயிரம் விவசாயிகளை கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும்.
அதை வெவ்வேறு பகுதிகளில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் அவர்களை போராடும் விவசாயிகளுக்கு எதிராக பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் கூறினார். மேலும் அவர்களை விவசாயிகளுக்கு எதிராக கட்டைகளை கையில் எடுங்கள் என்றும் கூறியுள்ளார். விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த முதல்-மந்திரிக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.