பிக்பாஸ் 7 வீட்டிலிருந்து முதலாவதாக எலிமினேட் ஆன நபர்!!! உண்மையான விடை தெரியாமல் குழப்பத்தில் ரசிகர்கள்!!!

0
118
#image_title

பிக்பாஸ் 7 வீட்டிலிருந்து முதலாவதாக எலிமினேட் ஆன நபர்!!! உண்மையான விடை தெரியாமல் குழப்பத்தில் ரசிகர்கள்!!!

பிக்பாஸ் 7வது சீசனில் இருந்து முதலாவதாக வெளியேறிய நபர் யார் என்பதை அறிந்து கொள்ள ஆர்வத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு தற்பொழுது வெளியாகியுள்ள விடைகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் பாக்ஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் விஷ்ணு, வினுஷா, அக்சயா, பிரதீப், விசித்ரா, ஜோவிகா, பவானி செல்லதுரை, ரவீனா, நிக்சன் உள்பட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

வழக்கத்தை போலவே இந்த சீசனை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். இதுவரை நடந்து முடிந்த 6 சீசன்களில் இல்லாத வகையில் 7வது சீசனில் இரண்டு வீடுகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஸ்மால் பாஸ் வீடு பிக்பாஸ் வீடு என்று இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்ட இந்த சீசனில் முதல் நாளில் இருந்தே ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத விதமாக முதல்வாரமே வீட்டை விட்டு வெளியேறுவதற்கான செயல்முறை நடந்தது. அதன்படி பிரதீப், யுகேந்திரன், ஜோவிகா, அனன்யா, யுகேந்திரன், ஐஷு, பவானி செல்லதுரை ஆகிய ஏழு போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர்.

இதில் குறைவாக வாக்கு பெறும் ஒரு நபர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். அந்த வகையில் ஒரு பக்கம் யுகேந்திரன் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மறுபக்கம் அனன்யா ராவ் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதில் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறி உண்மையான நபர் குறித்து தகவல்கள் கிடைக்க வில்லை. இன்று(அக்டோபர்8) இரவு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முதல் நபர் யார் என்று தெரியவரும்.

Previous articleபணியிடம்: சேலம்.. தமிழக அரசின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் அசத்தல் வேலை!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் அக்டோபர் 15!!
Next articleமூன்று வீரர்கள் சதம் அடித்த போட்டி!!! பல சாதனைகளை படைத்து வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா!!!