புதுவையில் 16 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Hasini

புதுவையில் 16 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

Hasini

First schools open on the 16th in Puduvai! Chief Minister's announcement!

புதுவையில் 16 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல், நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்துஅணைத்து மாநிலங்களிலும், அதே போல் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதற்கிடையில் புதுவையில் இரண்டாவது அலையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்ததன் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அரசின் அதிரடி நடவடிக்கையால் கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியதை அடுத்து மே மாதம் 24ஆம் தேதி முதல் தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்து உள்ள காரணத்தினால் ஊரடங்கில், தற்போது மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதேபோல புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளும் 16ஆம் தேதி முதல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.