மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்கவுள்ள நிலையில், சென்னை காசிமேடு சந்தையில், மீன்கள் விற்பனை களைகட்டியது.
மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இதன் காரணாமாக தமிழகத்தில் சுமார் 61 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு, செல்ல மாட்டார்கள். இந்த காலகட்டத்தில், படகு, வலைகளை சீரமைக்கும் பணிகளை மீனவா்கள் தொடங்குவர்.
இந்த நாட்களில், ஆழ்கடலுக்கு செல்லாமல், குறுகிய தூரம் செல்லக்கூடிய வகையில் ஃபைபா் படகு மூலம் மீனவர்கள், மீன் பிடித்து வருவர். இதனால் மீன் வரத்து குறைவதோடு, அவற்றின் விளையும் அதிகரித்து இருக்கும். இதனிடையே மின் பிடி தடைக்காலம் நாளை தொடங்க இருப்பதால் இன்று மீன் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
குறிப்பாக, சென்னை காசிமேடு சந்தையில், வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை முதலே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீன் வியாபாரிகளும், பொதுமக்களும் முந்தியடித்து கொண்டு, மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.