FLASH: சபாநாயகர் அப்பாவு மீது கிரிமினல் வழக்கு.. உயர் நீதிமன்றம் காட்டிய அதிரடி!! 

0
588
FLASH: Criminal case against Sabanayakar's father.. High Court showed action!!
FLASH: Criminal case against Sabanayakar's father.. High Court showed action!!

FLASH: சபாநாயகர் அப்பாவு மீது கிரிமினல் வழக்கு.. உயர் நீதிமன்றம் காட்டிய அதிரடி!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகராக இருந்து வரும் எம். அப்பாவு மீது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகி பாபு முருகவேல் என்பவர் கிரிமினல் அவதூறு புகார் மனு ஒன்றை தெரிவித்து உள்ளார்.அந்த குற்றவியல் வழக்கை எடுத்துக் கொள்ளுமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் நடைப்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் சபாநாயகர் ஆற்றிய உரையை பாபு முருகவேல் மேற்கோள் காட்டி கூறியுள்ளார்.

அதில் அப்பாவு கூறியதாகக் அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் பின்வருமாறு, முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 40 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுபினர்களாக (திமுக) சேர விருப்பம் தெரிவித்து இருந்ததாகவும் அது குறித்து தன்னிடமும் தங்கள் கட்சியின் தலைவரிடமும் பேச்சு வார்த்தைகள் நடந்ததாக அப்பாவு கூறியுள்ளார்.இது முழுவதும் பொய்யான தகவல் என முருகவேல் மறுத்துள்ளார்.இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleADMK+TVK: விஜய் வாக்கு வாங்கி எங்களுக்குத்தான்.. பேச்சு வார்த்தை நடத்தும் அதிமுக மாஜி!! வெளியான பரபரப்பு தகவல்!! 
Next article3 நாளில் அல்சர் பிரச்சனை நீங்க அவலுடன் இதை சேர்த்து சாப்பிடுங்கள்!! இனி வயிற்றுப்புண் பிரச்சனையே இருக்காது!!