Flash: இனி இவர்கள் வங்கி கணக்கிலும் ரூ 1000.. தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!
ஆளும் திமுக அரசு தமிழக மகளிர்களுக்கு பல புதிய திட்டங்களை தீட்டி,அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.அதில் இலவச கட்டணாமில்லா பேருந்து வசதி பெண்களின் மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை சேமிக்க மிக உதவியாக இருந்து வருகிறது .
அதுமட்டுமில்லாமல் கலைஞர் அவர்களின் பெயரால்,குடும்பதலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது .இதனால் தங்களது வாழ்கைத் தரம் குறிப்பிட்ட அளவில் உயர்ந்துள்ளது என பெண்கள் கூறுகின்றனர்.ஆனால் இந்த திட்டம் ஒரு சில மகளிர்க்கு சரியாக சென்று சேரவில்லை என்று பரவலாக பேசப்பட்டது.அதிகப்படியான விண்ணப்பங்கள் தகுதி இல்லை என்று நிராகரிக்கப்பட்டது.
இந்த சூழலில் தான் அரசு புதிதாக கலைஞர் உரிமை தொகையினை இனி அரசு அலுவலங்களில் பணிபுரியும் ஊழியர்களுடைய மனைவிகளுக்கும் மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது.மேலும் புதிய ரேஷன் அட்டை பெறும் குடும்பங்களும் இத்திட்டத்தில் பயனாளர்களாக சேர்க்கப்படவுள்ளனர்.இதற்கான விண்ணப்பங்கள் இப்பொழுது நியாய விலை கடைகளில் கொடுக்கப்பட்டு வருகிறது.இந்த விண்ணப்பங்களை பெறுவதற்கான கால அவகாசம் இன்னும் குறைந்த நாட்களே உள்ளது.
இந்தநிலையில் தமிழக அரசு கலைஞர் உரிமை தொகைக்கு வட்டி தரும் புதிய திட்டம் ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.அந்த வட்டி சதவீதம் 7.5 என்ற அளவில் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கலைஞர் உரிமை தொகை இணைய வசதி இல்லாத ஊர்களுக்கு சென்றடைய வசதி செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில் நீலகிரி போன்ற மலைப்பிரதேசங்களில் இருக்கும் மக்களுக்கு கூட்டுறவு வங்கியில் கணக்குகள் தொடங்கி அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது.மேலும்,தபால் முறை மூலமும் பணம் வினியோகிக்கப்படுகிறது.