Breaking News, Cinema, National

FLASH: கை நாட்டு வைத்து காதல் கணவனை கரம் பிடித்த ரஜினி பட ஹீரோயினி!!

Photo of author

By Janani

 

FLASH: கை நாட்டு வைத்து காதல் கணவனை கரம் பிடித்த ரஜினி பட ஹீரோயினி!!

இந்தி திரை உலகில் முன்னனி நடிகையாக இருந்து வருபவர் சோனாக்‌ஷி சின்ஹா,இவருடைய தந்தை பெயர் சத்ருகன் சின்கா,இவரும் ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.சோனாக்‌ஷி முதலில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி ,பிறகு நடிகையாக மாறினார்.தபாங் படத்தில் சிறப்பாக நடித்ததால் அவருக்கு ப்லிம் ஃபேர் விருது கிடைத்தது. அவர் தனது முதல் படத்திலேயே இவ்விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.மேலும் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா’ படத்திலும் நடித்திருந்தார்.

இந்த ஆண்டு ஹீரமண்டி வெப்சீரிஸ் மற்றும் படே மியான் சோட்டே மியான் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.ஜாகீர் ரத்தன்சி என்று அழைக்கப்படும் ஜாகீர் இக்பால் இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்.மேலும் இவர் சல்மான் கானின் நெருங்கிய நண்பர் ஆவார்.இந்த நிலையில் சோனாக்‌ஷி சின்ஹாவும்,ஜாகீர் இக்பாலும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வருவதாக தெரிகிறது.

ஆனால் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலை பெற்றோர்கள் ஏற்று கொள்வார்களா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இவர்களின் திருமணம் மும்பையில் ஜூன் 23-ம் தேதி அன்று கோலாகலமாக நடைபெற்றது.இதில் இந்திய திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.மேலும் பதிவு திருமணத்தின் போது சோனாக்‌ஷி கையெழுத்து போடுவதற்கு பதிலாக கைநாட்டு போட்டது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

கையெழுத்து போடதெரியாத நடிகை என சமுக ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களை எழுதி வருகின்றனர்.இது தொடர்பாக எந்த ஒரு விளக்கமும் சோனாக்‌ஷி தரப்பில் கூறப்படவில்லை.

இந்த 2 கோடியை MLA-க்கள் செலவு செய்யலாம்!! அமைச்சர் துரைமுருகனின் அதிரடி உத்தரவு!!

அனீமியா: இரத்த சோகை இருப்பவர்கள் இந்த இலையை அரைத்து சப்பிடுங்கள்!! 10 நாளில் பலன் கிடைக்கும்!