FLASH: டாஸ்மாக்கில் வரப்போகும் புதிய கட்டுப்பாடு.. இனி மதுபான பாட்டில்களுக்கு வரைமுறை!!

0
123
FLASH: Tasmac to come up with limit control .. limit for liquor bottles
FLASH: Tasmac to come up with limit control .. limit for liquor bottles

 

FLASH: டாஸ்மாக்கில் வரப்போகும் புதிய கட்டுப்பாடு.. இனி மதுபான பாட்டில்களுக்கு வரைமுறை!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் முக்கியமான விஷயம் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்.இதனால் இதுவரை 60க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர்.அந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.ஏனெனில் சாராயத்தில் கலந்துள்ள மெத்தனால் எனும் வேதிப்பொருள்,அது அந்த அளவிற்கு உடம்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இன்னும், சேலம்,புதுச்சேரி ,விழுப்புரம்,போன்ற பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை எதிர்த்து சட்ட சபையில் பேச வாய்ப்பு வழங்கவில்லை என எதிர் கட்சியான அதிமுக குற்றம் சாட்டியது.இந்த நிலையில் மதுபானங்கள் குடிப்பது தொடர்பாக ஒரு புது சர்ச்சை எழுந்துள்ளது.

அதாவது தமிழ்நாட்டை,பொருத்த வரையில் அரசே டாஸ்மாக் கடைகளை எடுத்து நடத்தி வருகிறது.இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்கள் அரசுக்கு தற்போது கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.அதாவது டாஸ்மாக் கடைகளில் வரும் வாடிக்கையாளர்கள் பலர் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக பாட்டில்கள் வாங்கி செல்கின்றனர்.

மேலும் இதனை அவர்கள் கள்ளச்சந்தையில் விற்பதாகவும் தெரிகிறது.எனவே அரசு நடவடிக்கை எடுத்து ஒருத்தர் எவ்வளவு பாட்டில்கள் வாங்கலாம் என்பதை நெறிமுறைப்படுத்த வேண்டுமென டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.