தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை! பொது மக்கள் பீதி!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது என பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது கனமழையின் காரணமாக, பல்வேறு ஆறு, குளம், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், காஞ்சிபுரம், ஆலங்குடி, புதுக்கோட்டை, அரியலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த ஆறு மணி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நீர்நிலைகளில் கரை ஓரங்களில் இருக்கின்ற பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.