ரத்தத்தை தொடர்ந்து அடுத்து ஹிட்லர் வந்துட்டாரு!!!

ரத்தத்தை தொடர்ந்து அடுத்து ஹிட்லர் வந்துட்டாரு!!!

விஜய் ஆண்டனி நடிப்பில் அக்டோபர் 6 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் ரத்தம் திரைப்படத்தின் புரோமோஷன் விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் கடந்த வாரம் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

இந்த துக்க சம்பவத்திலும் கடமை தவறாது,அவர் நடித்து வெளியாகவுள்ள ரத்தம் திரைப்படத்தின் புரோமோஷன் விழாவிலும் நேற்று கலந்து கொண்டார்.

இந்த ரத்தம் திரைப்படத்தை தொடர்ந்து, இவர் அடுத்ததாக நடித்துக் கொண்டுள்ள திரைப்படம் தான் ஹிட்லர். அவ்வாறே இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.மேலும் இப்படத்தின் கதை, மற்றும் தயாரிப்பு பணி போன்றவை விஜய் ஆண்டனி அவர்களே தான் என்பது இங்கு சிறப்பிற்குரியது.

சொந்த வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும், அதனை வெளியுலகிற்கு காட்டி கொள்ளாமல், அவரது பணியை சிறப்பாக செய்து வரும் விஜய் ஆண்டனிக்கு பலரும் பாராட்டுகள்,மற்றும் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.