மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்களின் கவனத்திற்கு!! ரேஷன் கார்டு முகவரியை எவ்வாறு மாற்றுவது?
ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்பவர்கள் தங்கள் ரேஷன் கார்டுகளில் இருக்கும் முகவரியை எளிமையாக எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரேஷன் கார்டுகளில் மாற்றங்கள் எதாவது செய்ய வேண்டும் என்றால் நாம் நேரடியாக அதற்கு உண்டான அலுவலகத்திற்கு சென்று எழுதிக் கொடுத்து மாற்ற வேண்டும். அல்லது நாம் ஆன்லைன் மூலமாக மாற்றலாம். நாம் நேரடியாக சென்று ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்வது கடினமாக இருந்தால் ஆன்லைன் மூலமாக மாற்றிக் கொள்ளலாம். அந்த வகையில் இந்த பதிவில் ரேஷன் கார்டுகளில் நம்முடைய முகவரியை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம்.
மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்கள் ரேஷன் கார்டுகளில் உள்ள முகவரியை மாற்றும் முறை…
1. முதலில் கூட்டுறவதுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.pdsportal.nic.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. அதன் பின்னர் மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான PDS போர்ட்டலுக்குள் நுழைய வேண்டும்.
3. அதில் உள் நுழைந்த பின்னர் மேல் பக்கத்தில் இடது புறத்தில் உள்ள மாநில அரசு இணையதளங்கள் அதாவது State Government Portal என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
4. இதையடுத்து திறக்கப்படும் பக்கத்தில் தேவையான மாநிலத்தை கிளிக் செய்தால் நீங்கள் கிளிக் செய்யும் மாநிலத்திற்கான இணையதளத்திற்கு செல்லும்.
5. அதன் பின்னர் ரேஷன் கார்டுகளில் முகவரியை மாற்றும் படிவம் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
6. அதன் பின்னர் யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் உருவாக்க வேண்டும்.
7. இந்த யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் பயன்படுத்தி ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய வேண்டிய முகவரியை இதில் கொடுக்க வேண்டும்.
8. விவரங்கள் அனைத்தையும் சரியாக கெடுத்த பின்னர் சப்மிட் கொடுக்க வேண்டும்.
அதன் பின்னர் அனைத்து விவரங்களையும் சரிபார்க்கப்படும். கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக இருப்பின் ரேஷன் கார்டுகளில் உள்ள முகவரிகள் மாற்றப்படும்.