தவெக மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு.. விஜய்யின் விருந்து திட்டம் !!

Photo of author

By Jeevitha

TVK: தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்க கட்சியின் தலைவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக கட்சி தலைவர் விஜய் அரசியலுக்கு வந்தது மிக பரபரப்பாக பேசப்பட்டது. அந்த நிலையில் அவரின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் மிக சிறந்த முறையில் நடைபெற்று முடிந்தது. அதை தொடர்ந்து தவெக கட்சி தலைவர் விஜய் மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் மாநாடு முடிந்ததும் நிலம் கொடுத்தவர்களை மறந்து விட்டு அவர்களுக்கு தர வேண்டிய பணத்தை கூட தராமல் ஏமாற்றும் சில அரசியல் கட்சிகள் இருக்கும் நிலையில் விஜய் மற்றவர்களை போல அல்லாமல் தனி மனிதனாக செயல்படுகிறார். இதனை தொடர்ந்து  விக்கிரவாண்டியில் மாநாடு நடக்க நிலம் கொடுத்தவர்கள், எஸ்டேட் உரிமையாளர்கள் மற்றும் பார்க்கிங் வசதி செய்ய நிலம் கொடுத்தவர்கள் என அனைவருக்கும் விருந்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த விருந்து நடைபெறும் இடம் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில், அடுத்த வாரம் நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் அந்த நிகழ்ச்சிக்கு வரவுள்ள அனைவருக்கும் தனது கட்சி அலுவலகத்தில் விஜய் தனது கைகளால் பரிமாறுவார் என தவெக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த செய்தி மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது என கூறுகின்றன.