இங்கு செல்ல ஐந்து நாட்கள் தடையாம்! உங்களுக்கு தெரியுமா?

Photo of author

By Hasini

இங்கு செல்ல ஐந்து நாட்கள் தடையாம்! உங்களுக்கு தெரியுமா?

கடந்த ஒன்றரை வருடங்கள் ஆகவே கொரோனா தொற்றின் காரணமாக கோவில்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கும் விதத்தில் கோவில்கள் அதிக நாட்கள் மூடியே இருந்தது. அப்படியே திறந்தாலும் பூசாரிகள் மட்டும் ஆகம விதிப்படி பூஜைகளை செய்து வந்தார்கள். இதன் காரணமாக கோவிலில் வேலை செய்யும் பூசாரிகளின் நிலை மிகவும் கஷ்டமாகவே இருந்தது. தற்போது சிறிது குறைந்துள்ள கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கோவில்கள் மூடி இருந்த நிலையில் கடந்த 5 வாரங்களுக்கு முன்புதான் கோவில்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி கிடைத்தது.

தற்போது ஆடி மாதம் நடைபெறுவதால் கோவில்களில் பொது மக்கள் கூட்டமாகவும், பெரும் டிரலாகவும் அலை மோதுகின்றனர். அதிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் இருக்கும் பட்சத்தில், மக்கள் கோவில்களுக்கு அதிகளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரிதுவிடுமோ என்ற அச்ச உணர்வும் மேலோங்குகிறது.

அதிலும் குறிப்பாக ஆகஸ்ட் 2ம் தேதி ஆடி கிருத்திகை என்பதன் காரணமாக திருத்தணி முருகன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என அறநிலையத் துறை சார்பாக எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தொற்று பயம் அதிகரிக்கும்  என்ற எண்ணமும் அனைவருக்கும் உள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை 5 நாட்கள் கோவில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் முன்னெச்சரிக்கை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கோவிலில் நடைபெறும் அனைத்து பூஜை விதானங்கள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் அனைத்தும் வீட்டிலிருந்தே மக்கள் பார்த்து மகிழலாம் என்றும் அறநிலையத் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.