அந்த காட்சியை மறந்துவிட்டு பாருங்கள்! நடிகர் விஜய் ஆண்டனி அறிவிப்பு! 

Photo of author

By Sakthi

அந்த காட்சியை மறந்துவிட்டு பாருங்கள்! நடிகர் விஜய் ஆண்டனி அறிவிப்பு!
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சியை மறந்துவிட்டு திரைப்படத்தை பாருங்கள் என்று நடிகர் விஜய் ஆண்டனி தற்பொழுது கூறியுள்ளார்.
இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்த திரைப்படத்தில் நடிகை மேகா ஆகாஷ், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி அவர்கள் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு நடிகர் விஜய் ஆண்டனி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதாவது மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் சென்சார் போர்டு சர்டிபிகேட் வழங்கிய பின்னர் கூடுதலாக சில காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அதுவும் என்னுடைய கவனத்திற்கு வராமலேயே அந்த கூடுதல் காட்சி சேர்க்கப்பட்டுள்ளது என்றும் படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் கூறியிருந்தார்.
இதற்கு மத்தியில் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நடிகர் விஜய் ஆண்டனி அவர்களுக்கும் இடையே இருக்கும் பிரச்சனைதான் இதற்கு காரணம். அந்த பிரச்சனையால் தான் தயாரிப்பு நிறுவனம் இந்த காட்சியை சென்சாருக்கு பிறகு சேர்த்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
இதை சமாளிக்க தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் அதற்காக பத்திரிக்கூயாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறிய நிலையில் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
அது மட்டுமில்லாமல் தயாரிப்பு நிறுவனம் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் இருந்து அந்த ஒரு நிமிட காட்சியை நீக்கியுள்ளது. இதையடுத்து இயக்குநர் விஜய் மில்டன் அவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் “இந்த பிரச்சனையில் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்த நடிகர் சரத் குமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தள்பொழுது நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எக்ஸ் பக்கத்தில் “மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் துவக்கத்தில் வரும் 2 நிமிட காட்சியை தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் திரைப்படத்தில் இணைத்துள்ளதாக என்னுடைய நண்பர் படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் அவர்கள் கூறுகின்றார். அது நான் இல்லை. இது சலீம் 2 இல்லை” என்று கூறியுள்ளார்.