ADMK TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகள் வேகமேடுதுள்ள நிலையில், பல்வேறு திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. அந்த வரிசையில் முதலிடம் பிடிப்பது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை என்றே கூறலாம். இவர் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியதிலிருந்தே இதற்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத வண்ணம் உள்ளது. இவரின் ரசிகர்கள் அனைவரும் தவெகவின் தொண்டர்களாக மாறிவிட்டனர் என்றே சொல்லலாம். விஜய்க்கு இவ்வளவு ஆதரவு இருந்தாலும் கூட அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை. விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது போன்ற பல்வேறு கருத்துகள் மேலோங்கி இருந்தன.
இவ்வாறான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்த நிகழ்வு தான் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த நபரான செங்கோட்டையனின் இணைவு. அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த நிலையில் முதலில் அவரின் பதவிகள் பறிக்கப்பட்டது. பிறகு டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை வைத்து கொண்டதால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து விஜய் தலைமையில் தவெகவில் இணைந்தார். மேலும் அதிமுக அதிருப்தி அமைச்சர்கள் பலரையும் தவெகவில் சேர்ப்பேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதற்கான பணிகளை மும்முரமாக செய்து வரும் செங்கோட்டையன் ஓபிஎஸ், தினகரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் பொங்கலுக்கு முன் தவெகவில் இனையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை தொடர்ந்து நேற்று ஓமலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்து நிலையில் இன்று புதிதாக முன்னாள் அமைச்சர் மரியமுல் ஆசியா தவெகவில் இணைந்து விஜய் கட்சிக்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளார்.