DMK ADMK: தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் தமிழக அரசியல் அரங்கு வேகமேடுத்துள்ளது. 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக உள்ள திமுக இந்த முறையும் ஆட்சி கட்டிலை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமெனவும், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இம்முறையாவது வெற்றி பெற வேண்டுமெனவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
அந்த வகையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை ஆரம்பித்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு அதனை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்று மாற்றினார். இதனால் இவர் தனி கட்சி துவங்க போவதாக பலரும் கூறி வந்தனர். இவ்வாறான நிலையில் தான், ஓபிஎஸ்யின் ஆதரவளர்களான அன்வர் ராஜா, மைத்ரேயேன், மருது அழகு ராஜ், மனோஜ் பாண்டியன் போன்றோர் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது புதிதாக அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ-வும், ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளருமான சுப்புரத்தினம் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேலையில் ஓபிஎஸ் தெளிவான அரசியல் முடிவை எடுக்காததால் அவரின் ஆதரவாளர்கள் பலரும் மாற்று கட்சியை நாடி வந்தனர். இதனால் அவர்களை தங்கள் கட்சியில் சேர்க்க அதிமுக, திமுக என இரண்டு கட்சியும் போராடி வந்தது. இந்த சமயத்தில் சுப்புரத்தினம் திமுகவில் சேர்ந்து அதற்கு பலத்தை கூட்டியுள்ளது இபிஎஸ்க்கும், ஓபிஎஸ்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ஓபிஎஸ் தரப்பு முழுவதும் வேறு கட்சியை தேடி வருவது அவரது பலத்தை குறைத்து வருகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் மதிப்பிடுகின்றனர்.