AIADMK:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8 வது நினைவு தினம் இன்று டிசம்பர்-5 அனுசரிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் (68) அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நீண்ட கால பொது செயலாளராக இருந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்தார். அதன் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அதிமுக கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் போது ஜெயலலிதா இறந்ததால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார்.
தற்போது அதிமுக ஈபிஎஸ் கைவசம் இருக்கிறது.அதிமுகவில் இருந்து விலகி ஓபிஎஸ் அதிமுக தொண்டர் அணி என்ற அமைப்பிற்கு தலைவி வகித்து வருகிறார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இரண்டு தேர்தல்கள் நடந்து இருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக,பாமக ,அதிமுக மற்றும் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்தது இந்த தேர்தலில் தோல்வி அடைந்து இருந்தது.
அதன் பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தார் எடப்பாடி பழனிசாமி. எந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பெருபான்மையான தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாய சூழல் பழனிசாமிக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று டிசம்பர்-5 ஜெயலலிதாவின் 8 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அப்போது எடப்பாடி பழனிசாமி வருகிற தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றுவோம் என சூளுரைத்தார் அதிமுக தொண்டர்களும் அதை முன் மொழிந்தார்கள்.