DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், பல்வேறு முக்கிய அமைச்சர்களும், கட்சியின் தொண்டர்களும் கட்சி மாறி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிதாக அதிமுக இரண்டாக பிரிந்த போது, ஓபிஎஸ் பக்கம் நின்ற மனோஜ் பாண்டியன் அதிமுகவின் அரசியல் எதிரியான திமுகவில் இணைந்துள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ்யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது எல்லாம் நன்மைக்கே என்று பதிலளித்தார்.
இவரின் இந்த பதில் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது, ஓபிஎஸ்யின் ஒப்புதலுடன் தான் என்பது தெளிவாகியுள்ளது. மேலும் இதனை வேறு கோணத்தில் இருந்து பார்த்தால் ஓபிஎஸ்யும் கூடிய விரைவில் திமுகவில் இணைவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் அவரது மகனுடன் சென்று மூன்று முறை சந்தித்துள்ளார். மேலும் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், திமுக வெற்றி பெறும் என்றும் உறுதியளித்தார். இது மட்டுமல்லாமல், அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருப்பதால், இது திமுகவிற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையை பயன்ப்படுத்தி திமுக ஜெயிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார். இதனை தொடர்ந்து நடந்த தேவர் ஜெயந்தியில், டிடிவி தினகரன் திமுகவை வீழ்த்துவோம் என்று கூறிய போது கூட ஓபிஎஸ் திமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சமீப காலமாகவே திமுகவிற்கு சாதகமாக பேசாவிட்டாலும், அதற்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார். இதன் காரணமாக கூடிய விரைவில் ஓபிஎஸ்யும் திமுக பக்கம் சாயும் வாய்ப்பு உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர்.

