ADMK: அதிமுக தற்போது பல பிரிவுகளாக பிரிந்திருப்பதால் அக்கட்சியின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்ததோடு, அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. அதில் முக்கியமாக செங்கோட்டையனின் நீக்கம் அதிகளவில் பேசப்பட்டது. அதிமுக தலைமைக்கு எதிராக செயல்படுபவர்களுடன் செங்கோட்டையன் இணைந்ததால் அவரை கட்சியிலிருந்து நீக்கியதாக இபிஎஸ் கூறினார். இந்நிலையில் இபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ், டிடிவி தினகரன். சசிகலா, செங்கோட்டையன் போன்ற நால்வரும் ஒரு அணியாக திரண்டனர். இவர்கள் நால்வரும் இபிஎஸ்யால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்பதால் இது அதிமுகவிற்கு வாக்கு வங்கியில் பேசிய மாற்றத்தை உண்டாக்கும் என்று அதிமுகவை சேர்ந்தவர்களே கூறி வந்தனர்.
நால்வர் அணியை சமாளிக்க முடியாத இபிஎஸ்க்கு தற்போது புதிதாக ஓபிஎஸ் உருவில் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பித்த ஓபிஎஸ், அதிமுக ஒன்றிணையவில்லை என்றால், புதிய கட்சி துவங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஓபிஎஸ் தலைமையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஓபிஎஸ், சில சர்வாதிகாரிகளின் பிடியில் சிக்கியுள்ள அதிமுக, கடந்த 11 தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
தவறான தலைமை, தவறான பொதுக்குழு, தவறான பாதையில் செல்லும் கழகத்தை மீண்டும் ஒன்றன்றிணைக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வேறு முடிவை நோக்கி நகர வேண்டியிருக்கும் இருக்கும் என்று கூறியுள்ளார். இவரின் வேறு முடிவு என்ற பேச்சு புதிய கட்சியை தோற்றுவிப்பதற்கான முன்னறிவிப்பாக பார்க்கப்படுகிறது. இவருக்கு பின் பேசிய வைத்தியலிங்கம் இதனை நேரடியாகவே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இபிஎஸ் தலைமைக்கு எதிராக கழக குரல் ஓங்கி வரும் நிலையில், இதனை அவர் எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

