மறைந்தார் பிரபலம்! சோகத்தில் மூழ்கிய தமிழ் திரை உலகம்!

Photo of author

By Sakthi

மறைந்தார் பிரபலம்! சோகத்தில் மூழ்கிய தமிழ் திரை உலகம்!

Sakthi

இயக்குனரும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பெப்ஸி மோகன் காந்திராமன் காலமாகி இருக்கிறார் அவருக்கு வயது 89 என்று தெரிவிக்கப்படுகிறது.

மோகன் காந்தி ராமனுக்கு சில நாட்களுக்கு முன்னர் உடல் நல குறைவு ஏற்பட்டு அதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் இருக்கின்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவர் மரணம் அடைந்திருக்கிறார்.

மறைந்த மோகன் காந்திராமன் பழம்பெரும் இயக்குனர் பா நீலகண்டன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். தமிழில் செல்வியின் செல்வன் வாக்குறுதி, ஆனந்தபைரவி, காலத்தை வென்றவன், போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். மலையாளத்தில் விமோஜன சமரசம், சொர்ண விக்ரகம் போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். 1994 ஆம் ஆண்டு கில்லாடி மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் பாண்டியராஜனின் தந்தையாக நடித்திருக்கிறார். கருணாநிதி ,எம்ஜிஆர் ,ஜெயலலிதா உள்ளிட்டோரின் திரைப்படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.