முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம்… வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை..
இந்தியநாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினமான இன்று(ஆகஸ்ட்16) அவருடைய நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் பிரதமர் பதவிக்கான ஐந்தாண்டுகளை முழுமையாக பயன்படுத்தியவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார். மறைந்த முன்னாள் பிரதமர் 1996ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை பிரதமராக இருந்துள்ளார். அதன் பின்னர் 1998ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி முதல் 2004ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி வரை வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்துள்ளார்.
மொராஜி தேசாய் அவர்களின் அரசில் 1977ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை வெளியுறவுத் துறை இணை மந்திரியாக இருந்துள்ளார்.
இதையடுத்து இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம் இன்று(ஆகஸ்ட்16) அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள வாஜ்பாய் அவர்களின் நினைவிடத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஜனாதிபதியை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயக்கர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரி பியூஷ் கோலயல் உள்ளிட்ட தலைவர்களும் வாஜ்பாய் அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பாஜக கட்சியை சார்ந்தவர்களும் கூட்டனி கட்சிகளை சார்ந்தவர்களும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
நரேந்திர மோடி அவர்கள் பிரதமாரக பதவியேற்ற பின் வாஜ்பாய் அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. மேலும் வாஜ்பாய் அவர்கள் பிறந்த நாளான டிசம்பர் 25ம் தேதி ஒவ்வொரு வருடமும் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது