ஒரே நேரத்தில் சேர்ந்து வந்த நான்கு காதலிகள்! காதல் ரோமியோ செய்த செயல்!

Photo of author

By Hasini

ஒரே நேரத்தில் சேர்ந்து வந்த நான்கு காதலிகள்! காதல் ரோமியோ செய்த செயல்!

மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபமோய் கர் 25 வயதான இவர் கூச் பெஹார் பகுதி ஜோர்பத்கி பகுதியில் உள்ள இவர் உள்ளூர் மருந்து கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். அவர்களது ஏரியாவில் காளி பூஜை முடிந்து அவர் தனது பணிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞரின் 4 பெண் தோழிகள் ஒன்றாக அவரது வீட்டுக்கு வந்துள்ளனர்.

இதைக்கண்டு அதிர்ந்து போன அந்த இளைஞர் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துள்ளார். ஏனென்றால் நான்கு பெண்களிடமும் ஒரே மாதிரியான கவிதைகளையும், காதல் ரசம் சொட்ட சொட்ட வார்த்தைகளையும் பேசியுள்ளார். இதை எப்படியோ அந்த நால்வரில் ஒரு பெண் அறிந்துக் கொண்டு மற்றவர்களுக்கும் தெரிவித்து உள்ளார்.

அதன் காரணமாக நான்கு பெண்களும் தங்களை ஏமாற்றிய அந்த இளைஞனை கையும் களவுமாக ஒரே நேரத்தில் பிடிக்க வேண்டும் என முடிவு செய்து 4 பேரும் ஒன்றாக அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபரோ அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டார். அவர்களிடம் என்ன கூறுவது என்று திக்கு முக்காடி உள்ளார்.

அவரது காதலிகளான நான்கு பெண்களும் அந்த நபரிடம் இது குறித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிப் போன அவர், திடீரென்று இந்தப் பிரச்சினை வேறு எதிலும் முடிந்து விடுமோ? என்று பயந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த நபரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தற்போது அந்த நபர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த இளைஞன் மீது இளம் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.