ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ள நான்கு மாநில தேர்தல்! பொறுப்பாளர்களை நியமித்த பாஜக கட்சி!!

0
89

ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ள நான்கு மாநில தேர்தல்! பொறுப்பாளர்களை நியமித்த பாஜக கட்சி!!

 

சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்பட நான்கு மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜாக கட்சி நியமித்துள்ளது.

 

நடப்பாண்டு இறுதியில் அதாவது 2023ம் ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் தெர்தல் நடைபெறவுள்ளது. மேலும் 2024ம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.

 

இதையடுத்து 2023ம் ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் தேர்தலுக்கும் 2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலுக்கும் பாஜக கட்சி இப்பொழுது இருந்தே தயாராகி வருகிறது. இந்நிலையில் கூடிய விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நான்கு மாநிலங்களுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக கட்சி நியமித்துள்ளது.

 

இதையடுத்து ராஜஸ்த்ன் மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் ப்ரகலாத் ஜோஷி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல், பாஜக தலைவர் குல்தீப் பிஷ்னோய் ஆகிய இருவரும் இணை பொறுப்பாளர்களாக நியிமிக்கப்பட்டுள்ளனர்.

 

சத்தீஸ்கர் மாநில தேர்தல் பொறுப்பாளராக ஓம் பிரகாஷ் மாத்தூர் அவர்களும் இணை பொறுப்பாளராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இதே போல மத்திய பிரதேச தேர்தல் பொறுப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர மாதவ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். துணை பொறுப்பாளராக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

தெலங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளராக பாஜக எம்பி பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளராக சுனில் பன்சால் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Previous articleகனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி!! அரை இறுதிக்கு முன்னேறிய வீராங்கனை!!
Next articleதமிழக வேளாண் திருவிழாவை தொடங்கி வைத்த  முதல்வர்!! விவசாயிகளுக்கு புதிய அறிவிப்பு