அவர் நன்றாக விளையாடுவார்! கேப்டன் கோலியை புகழ்ந்த முன்னாள் வீரர்!

0
99

இங்கிலாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட அணிகளுக்கு இடையே நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளையதினம் இங்கிலாந்து நாட்டில் இருக்கின்ற லண்டன் நகரில் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில், விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல் அவருடைய பேட்டிங்கிலும் சிறந்து விளங்கினால் மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பி வரலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ ராமன் தெரிவித்து உள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும், தலா ஒரு வெற்றி பெற்று ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருக்கின்றன. முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. நாளைய தினம் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் இருக்கின்ற ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

முதல் மூன்று கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் 5 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து ஒரு அரை சதம் மட்டுமே அடித்தார் இதில் இந்திய அணி முன்னிலை பெறும் அளவிற்கு மிகப்பெரிய இன்னிங்சில் அவர் விளையாடவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டபுள்யூ வி ராமன் விராட்கோலி அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல் அவருடைய பேட்டிங்கில் கவனம் செலுத்தி வந்தால் மறுபடியும் பழைய நிலைக்கு இந்திய அணி திரும்பும் அவர் மீது அதிக அழுத்தம் இருக்கிறது. அதனாலேயே எல்லாருடைய கவனமும் அவர் மீது திரும்பியிருக்கிறது, அதோடு மட்டுமல்லாமல் அவர் சிறந்த வீரர் என்பதனாலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அதிகமாகவே அவர் ஆளாக்கப்படுகிறார் என்று கூறியிருக்கிறார்.

3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது இன்னிங்சில் விராட் கோலி மறுபடியும் பழைய திறமையுடன் ஆடினார் கண்டிப்பாக அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் மிகவும் நன்றாகவே விளையாடுவார் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.