மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை! மாவட்ட ஆட்சியாளர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Sakthi

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த வருடத்திற்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் வருகிற 30-ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது. இந்த முகாம் ஏப்ரல் மாதம் 1ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கின்ற இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கவும், மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு சென்று வர இலவச பேருந்து பயண அட்டை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதோடு சிகிச்சை குறித்து மருத்துவமனைக்கு சென்று வருவதற்கான மருத்துவ சான்றுடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் ஆதார் அட்டை நகல், 3 புகைப்படங்கள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, யூ.டி.ஐடி அட்டை அசல் மற்றும் நகல் உடன் நேரில் சென்று இலவச பயண அட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.