மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவால் அதிர்ச்சியில் ஆழ்ந்த மாவட்ட ஆட்சியரகம்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து அந்த கட்சி தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவரும் திட்டங்கள் ஒவ்வொன்றும் பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டுகளை பெற்று வருகின்றன.அதிலும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று வாழ்க்கை தேர்தலின்போது வழங்கியிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்தநிலையில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அன்றைய தினமே இதற்கான ஒப்புதலையும் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.இதனால் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.இவ்வாறான சூழ்நிலையில், தற்சமயம் இந்த இலவச பேருந்து பயண திட்டம் காரணமாக, போக்குவரத்து துறை கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்திருப்பதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் பெண்கள் தற்போது பேருந்துகளில் ஏறுவதற்காக காத்திருந்தால் அந்த இடத்தில் பேருந்தை நிறுத்தாமல் செல்வது உள்ளிட்ட மனிதாபிமானமற்ற செயல்களில் ஓட்டுநர்கள் ஈடுபட்டு வருவது பெரும் கவலையளிக்கிறது

.நிலவரம் இவ்வாறிருக்க ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் வழங்குவதற்கான திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்து இந்து தேசிய கட்சியினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுவளித்திருக்கின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது, இதில் ஆண்களும் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் இந்து தேசிய கட்சியினர் வரிசையாக இன்று கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து மாநில செயலாளர் ஹரிதாஸ் சர்மா பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றியபோது தமிழக அரசு பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை உறுதி செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

இதனைத்தொடர்ந்து வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கின்ற அனைத்து ஏழை ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அங்கீகாரத்துடன் கூடிய இலவச பேருந்து பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.