தீபாவளிக்கு இலவச சிலிண்டர்! அரசின் அட்டகாசமான அறிவிப்பு!

Photo of author

By Jeevitha

தீபாவளிக்கு இலவச சிலிண்டர்! அரசின் அட்டகாசமான அறிவிப்பு!

Jeevitha

Free cylinder for Diwali! Government announcement!

Free Gas: ஆந்திர அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப பெண்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

தீபாவளி பண்டிகை காரணமாக பல்வேறு மாநிலங்களில் அரசு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கு பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தீபாவளிக்கு இலவசமாக சிலிண்டர் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் பரப்புரையை கூறினார்.

அப்போது அவர் மக்கள் மனதை கவரும் விதமாக ஏழை பெண்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும் என பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கூறி இருந்தார். அதை நிறைவேற்றும் வகையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டது. அது என்னவென்றால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் அக்டோபர் (30) தீபாவளி அன்று அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4   மாதங்களுக்கு 1 முறை இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இலவச சிலிண்டர் எடுக்கும் போது பணம் செலுத்தி எடுக்க வேண்டும், பிறகு அந்த பணம் இரண்டு நாட்களுக்குள் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.